ஸ்ரீமதே ராமாநுஜாய நம:
ஸ்ரீமத்வரவரமுநயே நம:
வரும் 11-11-2018 அன்று, யதிபுநரவதாரரான ஸ்வாமி மணவாளமாமுனிகளின் திருவவதாரத் திருநாளான அழகுதிகழ்ந்திடும் ஐப்பசியில் திருமூலத் திருநாள் ஸ்ரீவைஷ்ணவர்கள் அனைவரும் கொண்டாடும்படியாக அமைந்திருக்கின்றது. இந்த நன்னாளில் நம் பெரியோர்கள் அனைவரும் நம் ஸ்வாமிக்கு மிகவும் உகப்பான புடலங்காய் பால்கூட்டு என்னும் பதார்த்தத்தைச் சமைத்து, அதை ஸ்வாமிக்கு அமுதுசெய்யப்பண்ணி அவரது முகமலர்த்தியை ஸேவித்து மகிழ்ந்தனர். நாமும் அதனை ஸ்வாமிக்கு அமுதுசெய்யப்பண்ணி ஸேவிக்க வேணுமென்னும் ஆசையுடையார்க்கு இப்பதிவின்மூலம் அதன் செய்முறையை அடியேன் அளிக்கிறேன்.
_தேவையான பொருட்கள்:_
1) புடலங்காய்
2) நெய்
3) காய்ச்சாத பால்
4) பாசிப்பருப்பு
5) வெல்லம்
6) மிளகு
7) ஏலக்காய் பொடி
_செய்முறை:_
புடலங்காயை சிறிது சிறிதாக வெட்டி, அதனை நெய்யில் சேர்த்து நன்றாக வதக்கி, அதனைக் காய்ச்சாத பாலில் இட்டு, இவற்றோடு கூட வேகவைத்த பாசிப்பருப்பையும் சேர்த்து வேகவைக்க வேண்டும். பின், சிறிது வெல்லத்தை நன்றாக வடிகட்டி, அந்த நீரை இந்த பால் புடலங்காயில் சேர்க்க வேண்டும். பின்பு, மிளகை நன்றாக நெய்யில் வறுத்து, அதனைப் பொடியாக்கி, பால் புடலங்காயில் சேர்த்து, ஏலக்காய் பொடியும் சேர்த்து நன்றாகக் கலக்க வேண்டும். இதுதான் புடலங்காய் பால்கூட்டு செய்யும் வழிமுறையாகும். அன்பர்கள் அனைவரும் இதனைச் சமைத்து நம் ஆசார்யனுக்கு ஸமர்ப்பித்து ஆசார்யகடாக்ஷத்துக்கு இலக்காக வேணுமாய் ப்ரார்த்திக்கிறேன்.
ஆழ்வார் எம்பெருமானார் ஜீயர் திருவடிகளே சரணம்!

No comments:
Post a Comment